search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
    X

    போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி பாய்ந்து வந்த காட்சி.

    இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

    • கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • பாதுகாப்பு பணிகளில் அலங்காநல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.



    முதலிடம் பிடித்த மாட்டின் உரிமையாளரான சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன.

    பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால கிருஷ்ணணின் மாடு பெற்றது. சிறிய மாட்டில் 2 சுற்றாக போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்ப னூர், கள்ளந்திரி மாடு களின் உரிமையாளர்கள் இணைந்து பெற்றனர்.

    மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறைப்பாறை வெண்டி முத்தையா மாடும், 2-ம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரனின் மாடும் பெற்றன.

    விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள், மாட்டு வண்டி பந்தயக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அலங்கா நல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.


    Next Story
    ×