search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி-மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

    அரசு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி-மறியல்

    • மேலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
    • மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் செல்ல காத்திருந்தனர். ஆனால் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிவகங்கை, ஏரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் கடும் அவதியடைந்தனர். பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் பலமணி நேரம் காத்திருந்தனர்.

    இதனால் கடும் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென பஸ்நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் மேலூர் அரசு பஸ் டிப்போ அலு வலகத்திற்கு தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறயில் கைவிடப்பட்டது. மேலூரில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் சரியான நேரத்திற்கு வருவதில்லை.

    முகூர்த்த காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. இதனால் பொது மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலையும் மாற வில்லை என பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×