என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/03/1875501-koottam.webp)
X
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
By
மாலை மலர்3 May 2023 1:13 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுரை மதுரை வடக்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் வடக்கு கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (4-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கோட்டத்திற்குட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X