என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீரிழிவு நோய்க்கு தீர்வு காண, அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.ஸ்ரீதர் விளக்கம்
- நீரிழிவு நோய்க்கு தீர்வு காண கல்லீரல், கணைய கொழுப்பு அளவை குறைப்பது முக்கியம் என்றார்.
- மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.ஸ்ரீதர் விளக்கமளித்தார்.
மதுரை
எந்திரத்தனமான இந்த உலகில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது அதிகரித்துவரும் ஒன்றாகும். இது இந்தியாவில் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இரண் டாம் வகை நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. இதில் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் அடங்கும்.
நீரழிவு நோய்க்கு மரபணு ஒரு முதன்மை காரணியாக இருந்தாலும், அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவை காரணிகளாக அமைகின்றன.
நகரமயமாக்கல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், உடலுழைப்பு இல்லாமை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது 2021 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 74.2 மில்லி யனாக இருந்ததை விட கணிசமான அதிகரிப்பு என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையானது இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயுடன் வாழும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியர் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். நீரிழிவு நோயாளிகளின் இந்த அதிகப்படியான எண்ணிக்கை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களின் அவசரத் தேவையை குறிக்கிறது.
நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் நீரிழிவு நோயை திரும்ப பெற முடியுமா என்பதை புரிந்து கொள்வதேயாகும். நீரழிவு நோயை திரும்ப பெறுதல் என்பது நிரந்தரமான சிகிச்சையை குறிக்கிறது என்பதால், "நீரிழிவு நோய் நிவாரணம்" என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை ஒருவருக்கு மீண்டும் ஏற்படும் சூழ்நிலையில் நீரழிவு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம், இதனால் மீண்டும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான நிரந்தர தீர்வை புரிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். நீரிழிவு நோயின் நிரந்தர தீர்வு என்பது ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், தொடர் மருந்து சிகிச்சை அல்லது இன்சுலின் சிகிச்சை தேவையில்லாத இயல்பான அல்லது சாதாரண நிலைக்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் HbA1c ன் மதிப்பு (மூன்று மாத கால ரத்த சர்க்கரை அளவுகளின் மதிப்பு) குறைந்தது ஆறு மாதங்களுக்கு 6.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது, மட்டுமே இதை அடைய முடி யும்.
கல்லீரல் மற்றும் கணைய கொழுப்பு அளவு குறைக்கப்படு வதே நிவாரணத்திற்கு உரிய வழி என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. மேலும் குறைந்த கலோரி கொண்ட உணவை பின்பற்றுவதன் மூலம் 10-15 சதவீதம் அளவு எடை குறைப்புடன் இதை அடையலாம். நீரிழிவு நோயை நிர்வகிக்க எடை குறைப்பை பராமரிப்பது முக்கியம் என் பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இழந்த எடையை மீண்டும் பெற்றுவிட்டால், நீரழிவு நோய் மீண்டும் வர மற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. இரண்டாம் வகை நீரழிவு நோய் ஒரு குறுகிய காலத்திற்குள் கண்ட றியட்டிருந்தால், இது பெரும்பாலான நோயாளிக ளுக்கு இருக்கும். 6 ஆண்டுகளுக் கும் குறைவாக நீரிழிவு நோய் மருந்துகள் உண்ணும் நோயாளி கள், இரண்டாம் வகை நீரழிவு நோய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், நிரந்தர தீர்வு நிலையை அடைவது கடினமாகும்.
நீண்ட கால நீரிழிவு நோயின் பாதிப்புகளான இதய நோய், சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு, பார்வைக் கோளாறுகள், மன நலப் பிரச்சினைகள் போன்ற நோய்வாய்ப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை உடைய நீரிழிவு நோயாளிகள் நிரந்தர தீர்வு காண்பது கடினம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் நிலையை திறம்பட நிர்வகிக்க நீரிழிவு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சிகிச்சையளிக் கும் நீரிழிவு மருத்துவரிடம் நிரந்தர தீர்வு அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய இது உதவும்.
மேற்கண்ட தகவலை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்து வமனை அகச்சுரப்பியல் மற் றும் நீரிழிவு நோய் உயர் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்