search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்டிகை கால சிறப்பு ெரயில்கள்
    X

    பண்டிகை கால சிறப்பு ெரயில்கள்

    • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ெரயில்கள் வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    மதுரை

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 4 மற்றும் 11-ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன்கிழமை) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    இதே போல மைசூர்-தூத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது இன்று (30-ந்தேதி) மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறு மார்க்கத்தில் நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    Next Story
    ×