search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி திருவிழா
    X

    கிராம மக்கள் போட்டி போட்டு கொண்டு மீன்பிடித்தனர்.

    மீன்பிடி திருவிழா

    • மேலூர் அருகே அய்வத்தான்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் ஊராட்சி அய்வத் தான்பட்டி கிராமத்தில் உள்ள அய்வத்தான் கண் மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மேலூர் மற்றும் கொட்டாம் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பொது மக்கள் மீன்பிடி உபகர ணங்களான வலை, கச்சா, ஊத்தா ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்திருந்தனர்.



    பிடிப்பட்ட மீனுடன் வாலிபர்கள்.

    பின் அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வழிபட்டு பின் கண்மாய் கரையில் வெள்ளை கொடி வீசி யதை தொடர்ந்து தயாராக நின்ற பொதுமக்கள் கண் மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து சென்ற னர். இந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வீதம் வரை நாட்டு வகை மீன் களான கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கன.

    இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பதை கடை பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழித்து மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

    இந்த மீன்பிடித் திரு விழாவின்போது பெண் ஒருவர் பிடித்த மீன் வலையில் திடீரென பாம்பு ஒன்று அகப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×