search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்பந்து அகாடமி தொடக்கம்
    X

    கால்பந்து அகாடமி தொடக்கம்

    • கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
    • கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    தமிழக அளவில் முதன்முறையாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கால்பந்து பள்ளியுடன் இணைந்து கல்வி சர்வதேச பள்ளி கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குநர் சங்கிலிகாளை முன்னிலை வகித்தார். விளையாட்டு மேனேஜர் விவீதா வரவேற்றார். லதா விழாவை தொகுத்து வழங்கினார். பைசுங் பூட்டியா கால்பந்து பயிற்சிப் பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ராதாகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு கால்பந்து துறையின் வளர்ச்சி மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

    அவர் கூறுகையில், மதுரையில் உள்ள இளம் கால்பந்து ஆர்வலர்கள் கால்பந்தில் திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் திறம்பட செயலாற்றி பரிசுகள் பெற முடியும் என்றார். கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×