என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கந்த சஷ்டி விழா வேல் வாங்கும் நிகழ்ச்சி
- கந்த சஷ்டி விழா வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின்5-ம் நாளான இன்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடக்கிறது.
கந்த சஷ்டி விழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாயொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை நடக்கிறது. விழாவில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் சூரனை அழிக்க அம்மனிடம் சக்திவேலை சுப்பிரமணிய சுவாமி பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (30-ந் தேதி) மாலை 6 மணியளவில் திருப்பரங்கு ன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி, வீரபாகு தேவருடன் சூரனை அழிக்கும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹாரத்தை கண்டு மகிழ்வார்கள்.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி காலையில் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெறும். திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு தினமான சித்திரை 1-ந் தேதியும், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளிலும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றுவது வழக்கம்.
அதுபோல் தற்போது கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில் வருகிற 31-ந் தேதி மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்