என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் வந்து நகை-பணம் பறிக்கும் கும்பல்
- மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம கும்பல் நகை-பணத்தை பறித்து சென்றது.
- வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும்.
மதுரை
மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது50). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் மறித்து அவரை தாக்கினர். தொடர்ந்து அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொட ர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறி வைத்து நகை-பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வரும் கொள்ளையர்கள் பட்டப்பகலில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வழிப்பறி கொள்ளை யர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.