என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகளின்றி செயல்படும் அரசு பள்ளி
- அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றி செயல்படுகின்றன.
- முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்குட் பட்ட விளாங்குடி 20-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கழிப்பறை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சுவற்றில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி தரை பெயர்ந்து காணப்படு கிறது. போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பராமரிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கழிப்ப றையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும் பள்ளி வளாகம் அருகே கால்நடைகள் கட்டுப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் அகற்றாமல் கேட் அருகிலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக கூறப்படு கிறது.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள், பள்ளி வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும், முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.