என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும்; பசும்பொன் பாண்டியன் கண்டனம்
- தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்