search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கோட்டை-கரிசல்பட்டி கிராமங்களில் கிராமசபை கூட்டம்
    X

    கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. 

    கீழக்கோட்டை-கரிசல்பட்டி கிராமங்களில் கிராமசபை கூட்டம்

    • கீழக்கோட்டை கிராமத்தில் புதியபள்ளி கட்டிடம் கட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன், வி.ஏ.ஓ. சுரேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி கிராம தூய்மை பாதுகாப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கீழக்கோட்டைக்கான ரேஷன்கடை கிரியகவு ண்டன்பட்டி கிராமத்தில் உள்ளது. அதனை பிரித்து கீழக்கோட்டையில் தனி ரேஷன்கடை அமைக்க வேண்டும், ஊராட்சி பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதனை அகற்றிவிட்டு புதியகட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் ஊராட்சி செயலர் குமரேசன் நன்றி தெரிவித்தார். திருமங்கலத்தினை அடுத்துள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கிராம தூய்மை பாதுகாவலர்கள், துப்பரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்த லைவர் சித்ராதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    Next Story
    ×