search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்
    X

    ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் உள்ளனர். 

    பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்

    • உலக நாடுகளுக்கு இணையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் மலையடிவாரத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பழனி வேல் தியாகராஜன், பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு மைதானம் மிகப் பிரமாண்ட அளவில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைய உள்ளது.

    ஜல்லிக்கட்டு என்பது சில நாட்கள் மட்டும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த பிரமாண்ட மைதானம் அமைய உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் தனி மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அதேபோன்று இந்த மைதானமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு அனைத்து போட்டிகளும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இங்கேயே தனி மருத்து வமனை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் வர உள்ளன. இங்கிருந்து 4 வழிச்சாலையில் சென்று சேரும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×