search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகம்
    X

    நவீன பயணச்சீட்டு சோதனை கருவியுடன் ரெயில்வே ஊழியர்.

    பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகம்

    • மதுரை கோட்டத்தில் பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த நடைமுறை அமலுக்கு வந்தது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் முதல்முறையாக மதுரை கோட்டத்தில் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் டிக்கெட் சோதனை செய்வதற்காக, கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்து உள்ளன. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டுகளை சுலபமாக சோதனை செய்ய இயலும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், அச்சிடப்பட்ட பட்டியலை பார்த்து பயணச்சீட்டுகளை சோதனை செய்வார்கள். தற்போது இந்த பட்டியல் கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை கோட்டத்தில் முதல் கட்டமாக தேஜாஸ், பாண்டியன் ஆகிய விரைவு ரெயில்களில் மேற்கண்ட கருவிகள், பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. தென்னக ரெயில்வே அளவில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். அடுத்தபடியாக காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் ஆகியவற்றை பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு உடனடியாக அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், மேற்கண்ட காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மதுரை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனைக்காக நவீன கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்தது, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×