search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்
    X

    பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்

    • பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்தார்.
    • தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் வீடுகள் முன்பு பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தைமாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந் தேதி) பொங்கல் அன்றும், 2-ம் நாள் (16-ந் தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது.

    பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்குவது, தமிழக மக்களின் கலாச்சாரம்- பண்பாடுகளை சீர்கு லைக்கும் செயல் ஆகும். அப்படி செய்வதால்தை மாதம் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடுகள், முறையாக நடத்தப்படுவதில்லை.

    ஐல்லிக்கட்டுக்கு முதல் நாளே அனைத்து கிராமங்களிலும் ஜல்லி கட்டு காளைகளின் உரிமையாளர்கள், உறவினர்கள், மாடுபிடி வீரர்கள் பொங்கல் நிகழ்ச்சிகளை அடியோடு புறக்கணித்து விடுகின்றனர். இதனால் புதிய கலாச்சார சீரழிவு உருவாக்கப்பட்டு வருகிறது.

    தமிழக மக்களின் இனம் மொழி கலாச்சாரம், பாராம் பரியம், பண்பாடுகளை பாதுகாக்கும் வகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழகம் முழு வதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×