என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகை திருட்டு: சிறையில் இருந்தவர் சிக்கினார்
- ஊமச்சிகுளத்தில் வீட்டில் நகை திருட்டில் சிறையில் இருந்தவர் சிக்கினார்.
- 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கில் துப்பு துலங்கியது.
மதுரை
ஊமச்சிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் மலைசாமி. இவரது வீட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நகைகள் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வீட்டில் குற்றவாளியின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆனாலும் இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டனர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. எனவே இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறையில் புலனாய்வு தொடர்பாக நவீன சாத னங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் அடிப்ப டையில் சிலைமான் போலீ சார், மலைசாமி வீட்டில் கிடைத்த கைரேகை மாதிரி அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த சேவுகராஜ் என்ப வருடன் கைரேகை ஒத்துப் போனது. போலீசார் அவரை தேடிச் சென்றனர். அப்போது சேவுகராஜ் முதுகுளத்தூர் கிளைச் சிறையில் இருப்பது தெரியவந்தது. சிலைமான் போலீசார் முதுகுளத்தூர் சென்று சேவுகராஜை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் மலைசாமி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.