என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகைக்கடை அதிபரிடம் நகை திருட்டு
- நகைக்கடை அதிபரிடம் 87 பவுன் நகை திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தேனி நகர் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வியாபார நிமித்தமாக செந்தில்குமார் 87 பவுன் நகையுடன் காரில் மதுரைக்கு வந்தார். அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் செந்தில்குமார் சாப்பிட சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் கார் கதவை திறந்து அதில் இருந்த 87 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினான். சிறிது நேரத்தில் ஓட்டலில் இருந்து வந்த செந்தில்குமார் கார் கதவு திறந்து கிடப்பதையும், நகை திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதில், காரில் இருந்த 87 பவுன் நகையை எனது கடையில் வேலை பார்க்கும் மேலாளர், டிரைவர் திருடியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






