search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் கோவில்  ராஜ கோபுர கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ராஜகோபுரம்.

    கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம்

    • கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
    • இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.

    Next Story
    ×