என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலங்கை குத்தகைக்கு விட்டது சட்டத்திற்கு புறம்பானது
- 1200 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டு குத்தகைக்கு விட்டது சட்டத்திற்கு புறம்பானது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை
சேலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்தின் நிலத்தை தனி நபர்களுக்கு இத்தனை ஆண்டுகள் குத்தகை விடுவதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.
ஆனால் விதிகளுக்கு புறம்பாக நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. எனவே இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.
எனவே 1200 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதீனத்தின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க உரிமை தமிழக அரசுக்கு இருந்தும் ஏன் அவ்வாறு செயல்படவில்லை என்றும், இது தொடர்பாக சிவகங்கை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.