search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்
    X

    ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்

    • ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,

    சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×