என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தீவிரம்
- போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்படுகிறது மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அவனியாபுரம்
மதுரை விமான நிலை யத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய வளாகத் தினைச் சுற்றி ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தபுள்ளி வெளியிடப்ப ட்டுள்ளது.
மதுரை விமான நிலையம் 1942 இல் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு முதல் பயணி கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பயணிகள், விமானங்கள் அதிகரித்ததன்பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய விமான நிலைய முனைய கட்டடம் கட்டப்பட்டது.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து இலங்கைக்கு(கொழும்பு)முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சரக்கு போக்குவரத்து விமான முனையம் கட்டப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.
சர்வதேச விமான நிலையமாகாத நிலையில் சுங்க பயன்பாடு உள்ள விமான நிலைய அந்தஸ்தை கொடுத்து மதுரையிலிருந்து துபை, சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவிலான பயணி களை கையாண்டுவரும் மதுரை விமான நிலையம் இந்திய அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலை யங்களில் 36-வது இடத்தை பெற்றுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க பெரிய விமானங்கள்(ஏர்பஸ் வகை) வந்து இறங்கி செல்லும் வகையில், தற்போது உள்ள ஓடு பாதை நீளம் 7 ஆயிரத்து 500 அடியிலிருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக விமான நிலையத்தைசுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு(புறம்போக்கு)நிலங்களைத் தவிர்த்து மீதி உள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது .
இதையடுத்து தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருப்பதை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி ஒப்பந்தபுள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் நிற்பதற்கு என ஏழு விமான நிறுத்த இடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ.97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சுற்றுச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அண்டர் பாஸ் முறையில் பாலம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. புதிதாக சரக்கு போக்கு வரத்திற்கு என கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று விமான நிலையம் பின்புறம் உள்ள பரமபட்டி பகுதியில் நில அளக்கும் பணி நடை பெற்றது இந்த பணிக்கு இடையூறாக யாரும் இருந்துவிடக் கூடாது என்ப தற்காக 100-ம் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது
இப்பணிகள் அனை த்தையும் முடிக்கப்படும் நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்