search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி
    X

    தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா பேட்டி அளித்தார்.

    ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி

    • ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    • போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை

    உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-

    6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.

    2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.

    இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×