என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/04/05/1861020-0011646483-1vadipatti.webp)
X
மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா
By
மாலை மலர்5 April 2023 1:45 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
- மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.
Next Story
×
X