search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்மபெருக்கை முன்னிட்டு கோவில்களில் குவிந்த புதுமண தம்பதிகள்
    X

    மதுரை முத்தீஸ்வரர் கோவிலில் செல்பி எடுத்து கொண்ட புதுமண தம்பதி.

    ஆடிப்மபெருக்கை முன்னிட்டு கோவில்களில் குவிந்த புதுமண தம்பதிகள்

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுைர கோவில்களில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
    • இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

    மதுரை

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடிப்பெருக்கான இன்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

    மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான புதுமணத்தம்பதிகள் வந்திருந்தனர். அவர்கள் பொற்றாமரைகுளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதே போல் முத்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றில் வழக்கமாக ஏராளமானோர் திரள்வது உண்டு.

    ஆனால் தற்போது மழை காரணமாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு பூஜை நடத்த போலீசார் தடை விதித்ததோடு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

    மதுரையில் திருமணமான பெண்கள் பலர் வீடுகளில் வழிபட்டு தாலி பிரித்து புதியதை அணிந்து கொண்டனர்.

    Next Story
    ×