என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும்- பசும்பொன் பாண்டியன் போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும்- பசும்பொன் பாண்டியன்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/15/1881651-untitled-1.gif)
போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும்- பசும்பொன் பாண்டியன்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தினார்.
- அதை யார் நடத்துவது என்பது தான் முக்கியமானது.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, வைகாசி விசாகம் என தொடர்ந்து பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்
அதுபோல் மலைக் கோவில் போகர் சன்னதி ஜீவ சமாதியில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம். போகர் 18 சித்தர்க ளில் மிக முக்கியமான சித்தராவார். போகரின் ஜீவ சமாதி சன்னதி மலைக் கோவில் அருகே அமைந்துள் ளது. ஆண்டுதோறும் மே 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலை யத்துறையின் கட்டுப்பாட் டில் உள்ள போகர் ஜீவ சமாதியில் போகர் ஜெயந்தி விழா நடத்தப்போவதாக சில தனியார் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. போகர் ஜெயந்தி விழாவை நடத்த லாம். அதை யார் நடத்துவது என்பது தான் முக்கிய மானது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதி யில் அரசின் அறநிலையத் துறை சார்பில் போகர் ஜெயந்தி விழாவை நடத்து வதே சரியானதாகும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.