என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டம்
- மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மதுரை
பருவ மழைக்கு முன்ன–தாக மதுரையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழை நீர் வடிகால் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை–களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் மதுரையில் தாழ்வான பகு–திகளில் அதிகளவில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ–டிக்கைகளை எடுப்பதற்காக மாநகராட்சி கமிஷனர் பிர–வீன்குமார் அதிகாரிக–ளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அந்த பகுதிளில் மழைநீரை தேக்கமின்றி வெளியேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.
மதுரை ஆழ்வார்புரம், செல்லூர் சுயராஜபுரம், மீனாம்பாள்புரம், பந்தல்குடி கால்வாய், பி.பி.குளம், கீழ தோப்பு, தத்தனேரி, காந்தி நகர், தைக்கால் தெரு, ஓபுளா படித்துறை, கிருது மால் கால்வாய், அண்ணா தோப்பு பகுதி, பேச்சியம்மன் படித்துறை சாலை, சுங்கம் பள்ளிவாசல், இஸ்மாயில் புரம், தாமிரபரணி வீதி, ஆத்திகுளம் கண்மாய் மற் றும் வண்டியூர் ஆகிய 18 பகுதிகள் தாழ்வான இடங்க–ளாக கண்டறியப்பட்டுள் ளன.
இந்த பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. மதுரையில் ஏற்கனவே கடந்த பல மாதங்களாக முல்லை பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அந்த சாலை–களில் சேறும் சகதியும் அதிக அளவில் குவிந்து வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து வருகிறது. மேலும் விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால் தந்தி நகர், திருப்பாலை, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் பொது–மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
மேலும் பல மாதங்களா கியும் செல்லூர்-குலமங்க–லம் மெயின் ரோடு போடப்படாததால் வாகன ஓட்டிகள் படும் பாடு சொல்லி முடியாது. அது போல கூடல் நகர், ஆனை–யூர் பகுதிகளிலும் சாலைகள் படு மோசமாக காணப்படு–வதால் அடிக்கடி விபத்துக–ளும் நடந்து வருகின்றன.
பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகு–திகளில் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை–களை விரைந்து சீரமைக்க வேண்டும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு சாலை பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கிறார்கள். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மதுரை நகரில் உள்ள மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்