என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெனகைமாரியம்மன் கோவில் வரலாற்று நூல் வெளியீடு
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடந்தது.
- திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா கோவில் அன்னதான மண்டபத்தில் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
கவுன்சிலர் சத்திய பிரகாஷ், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் இளமதி குத்துவிளக்கு ஏற்றினார். விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நூலை வெளியிட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் சத்தியமூர்த்தி, தொல்லியல்துறை காப்பாட்சியர் சக்திவேல், முன்னாள் சேர்மன் முருகேசன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னாள் கல்லூரி முதல்வர் சின்னன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை நிர்வாகி ராஜ்குமார், வட்டார விஸ்வகர்ம ஐந்தொழிலாளர் உறவின்முறை சங்க நிர்வாகி கண்ணன், ஆதி பெருமாள் ஆகியோர் பேசினர். நூல் ஆசிரியர் ஜனகராஜ் நன்றி கூறினார்.மணிகண்டன், இருளப்பன் என்ற ராஜா, முருகன், நடன ஆசிரியை பாக்கியலட்சுமி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள், கவுன்சிலர்கள் குருசாமி, முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.