என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர தயாரா?-உதயகுமார் சவால்
- எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர தயாரா? என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
- 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தியதாக கூறினார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகளையும், மதுரையில் தி.மு.க. அமைச்சர் நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றி எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால் அதற்கு அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்தி பேசுவது அவர் பதவிக்கு அழகு அல்ல, நாலாம் தர மனிதரைப்போல அமைச்சர் பேசி உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு, நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக தெரியும், உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது.நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் 3 கோடி என்று.
பற்றாக்குறை
மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்கிறீர்கள். அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை கூறப்படு கிறது, மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது, ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது, மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்ற ஆடம்பரத்தில் திருமணம் நடக்கவில்லை, இதில் எடப்பாடியார் பேசுவதில் எந்த தவறும் இல்லை.
அமைச்சர் மூர்த்தி பழையதை நினைத்துப் பார்க்க வேண்டும், அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அப்படி முன்னாள் முதல்வர் கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடலாமே, உங்களுக்கே தயக்கம் ஏன்? ஆனால் நாலாம் தர மனிதரைப் போல் அமைச்சர் பேசக்கூடாது, நாங்கள் எதற்கும் பின்வாங்க போகவில்லை,
ஆடம்பர திருமணம் என்பது ஊரே அறிந்த விஷயம். எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம் கூட பேசுவார். அமைச்சர் மூர்த்தி கனிம வளத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றினீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், ஒருஅமைச்சராக இருந்து கொண்டு, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்த திருமணம் நடந்தை பற்றி நியாயம் கேட்க எதிர்கட்சி தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு,
அஞ்சமாட்டோம்
அரசியல் நாகரீகம் கருதி இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசினால் உங்களை பற்றி வெட்ட வெளியில் பேச தயங்க மாட்டோம். அதற்காக நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம்.
மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 120 ஜோடி ஏழை,எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம், ஆனால் நீங்கள் முதல்-அமைச்சரை அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தி உள்ளீர்கள்.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள், இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்