என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை
- வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
- மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை
புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதார துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலைய சுகாதார துறை மேற்பார்வையாளர் தங்கச்சாமியின் தலைமையில் சுகாதாரத் துறையினர் மதுரை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை செய்கின்றனர்.
அரசு அறிவித்துள்ள விதிகளின்படி விமான பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை வரும் வெளிநாட்டு விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் கொரோனா தொற்று இருந்தால் அனைத்து பயணிகள் இருப்பிடத்திற்கு சென்று சுகாதாரத்துறை யினரால் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 187 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று (25-ந்தேதி) கொழும்பில் இருந்து மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.