என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
- குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது.
மேலூர்
மேலூர் அருகே உள்ள அ. வல்லாளபட்டி பஸ் நிலையம், செட்டியார்பட்டி சண்முகநாதபுரம், அரியப்பன்பட்டி சிலுப்பி பட்டி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட 7-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் வெளியே தொங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும், பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது. குரங்கினால் பொதுமக்கள் படும் அவஸ்தையை கண்டு வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வள்ளாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.
அவருடன் தி.மு.க. பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் சென்றனர்.