என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குழப்பத்தின் மொத்த வடிவம்-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
- பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குழப்பத்தின் மொத்த வடிவம் என்று முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
- தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஒரு கோடி பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப் படும் என்று அறிவித்து 7,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனை வருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என வாக்கு றுதியை அளித்தனர்.தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் ஆட்சி பொறுப் பேற்றவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினர். தற்போது மேலும் பல நிபந்தங்களை விதித்துள்ள னர்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விண் ணப்பத்தை கொடுத்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்கள் என கூறுவது ஒரு முரண்பாடு ஏற்பட்டுள் ளது. ஒரு கோடி பேருக்கு வழங்குவோம் என்று அறி வித்துவிட்டு, 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பம் வழங்கி, தற்போது பல நிபந்தனைகளை விதித்து இருப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது.
முதலில் அனைவருக்கும் வழங்குவோம் என முதலில் அறிவித்துவிட்டு, அதனை தொடர்ந்து தகுதி உள்ள வர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பல நிபந்தங்களை விதிப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. அதுபோல மகளிர் உரிமைத் திட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.