search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
    X

    விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட–போது எடுத்தபடம். இதில் மதுரை நாடார் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

    • 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின் முறை சார்பில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன் னிட்டு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா ம.நா.உ.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை நாடார் உறவின்முறை துணைத் தலைவர் ஆர்.முத்தரசு தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் வரவேற் றார். ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி கே.பி.எஸ்.வி.டி. மாணவர் விடுதி செயலாளர் ப.குமார், பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டி–யன், துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிரம–ணியன்,

    ஜெயராஜ் அன்னபாக்கி–யம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணைச் செயலாளர் ஒய்.சூசை அநா் தோணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தனியார் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றி–னார்.

    சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.கணேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும்,

    12-ம் வகுப்பு பொதுத் ேதர்வில் 500 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் கல்வி மேற்ப–டிப்பு ஊக்கத்தொகையாக வழங்கினார். முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×