என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
- தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- அதில் மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து ெகாண்டு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவர் கூறிய தாவது-
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர். அதில் மாதந்தோ றும் மின்கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள். தற்போது ஆள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்.
மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். 200 யூனிட் பயன்படுத்துவோர் 63.35 லட்சம் மின் நுகர்வோர்கள், 300 யூனிட் பயன்படுத்துவோர் 36.25 லட்சம் மின் நுகர்வோர்கள்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெசவாளர்க ளுக்கு 750 யூனிட் இலவச மாக வழங்கப்பட்டது தற்போது 750 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நெசவாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர் மிகவும் பாதிப்படைவார்கள்.
சொத்து வரி வருவாய் மூலம் அரசுக்கு ரூ.1750 கோடி கிடைக்கும். இந்த வருவாயை மற்ற துறை மூலம் ஈட்டி மக்கள் சுமையை அரசு குறைத்து இருக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.
மதுரை கருப்பாயூரணி பகுதியில் மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பேசும்போது, 1000 ரூபாய் நோட்டு எப்படி செல்லாதோ, அதேபோல் ஓ.பி.எஸ். செல்லாத நோட்டாக மாறி விட்டார். ஓ.பி.எஸ்-ஐ எல்லோரும் அன்போடு பன்னீர்செல்வம் என்று அழைத்து வந்த நிலையில் தற்போது அவர் கண்ணீர் செல்வமாக மாறிவிட்டார்.
அ.தி.மு.க.வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் விரைவில் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்வது உறுதி என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்