search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம்
    X

    சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×