என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
- வியாபாரியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர், 50 அடி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் அந்த பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் வசிக்கும் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். அப்போது இவருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அசோக்குமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விஷேச நிகழ்ச்சியில் தகராறு செய்த 5 பேர் கும்பல் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து அசோக்குமார் செல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்மக்கல் எல்.எம்.பி. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முருகன், கவுதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






