என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் குவிந்த பொதுமக்கள்
- மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
- கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் பணம், பட்டா, குடும்ப அட்டை மற்றும் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள்.
இந்த மனு மீது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை கலெக்டர் நேரில் அழைத்து பேசி உடனடியாக தகுதியு டைய மனுக்களுக்கு நட வடிக்கைகள் எடுக்க வலி யுறுத்துவார்.இதன் காரணமாக திங்கட்கிழமை களில் கலெக்டர் அலுவல கத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமை தொகை வழங்கிட ஆணை பிறப்பித்து அதை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவி களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப் பட்டது.
இந்த உரிமை தொகை கிடைக்காத நபர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பெரும்பாலும் உரிமை தொகை தொடர்பான மனுக்களாக இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.