என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி
- பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி(24). இவரது நண்பர் மனோஜ்(20). இருவரும் காரில் நேற்று இரவு பேரையூர் வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பேரையூர்-வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது குறுக்கே விலங்கு பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்இடை இழந்த கார் சாலையோரம் உள்ள சிக்னல் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செந்தூர்பாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story






