என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவி-குழந்தைகளை கொன்ற விவசாயி கவலைக்கிடம்
- அலங்காநல்லூர் அருகே மனைவி-குழந்தைகளை கொன்ற விவசாயி கவலைக்கிடமாக உள்ளது.
- இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருேக பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் உத்தராஜ். இவரது மகன் முருகன் (வயது 38). இவர் அலங்காநல்லூர் குலமங்கலம் ரோட்டின் அருகில் உள்ள பொம்மாத்தேவர் என்பவருக்கு சொந்தமான கொய்யா தோப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அவர் நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதில் அவருக்கு சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகனின் மனைவி சுரேகா, மகள் யோகிதா, மகன் மோகனன் ஆகியோர் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தனர். முருகன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அலங்கா நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் முருகன், தனது மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்ததாகவும், அதே போல் மகன், மகளையும் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முருகன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முருகன் கழுத்ைத அறுத்துக்கொண்டதால் அவரது கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் ஜோதிடர் ஒருவ ருக்கு போன் செய்து அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவ தாகவும், அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் ரூ. 4 ஆயிரம் மட்டும் உள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
முருகன் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகி றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்