என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல்
- மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
- குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மாரியப்பன் (56), அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகன் தங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். அதனை நம்பி, நான் அவர்களுக்கு பாண்டியராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் தங்கராஜ் குடும்பத்தினர் எனக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்தனர். அதனை அவர்கள் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.