என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/01/1815385-1.webp)
X
கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு
By
மாலை மலர்1 Jan 2023 1:33 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டார்.
- இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர்
தேசிய அளவிலான சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்கான அணித்தேர்வு தேவகோட்டையில் நடந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மகள் பிளஸ்-1 மாணவி ராகவி (16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.
Next Story
×
X