search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் தொடர் மழையால் நிரம்பி வரும் நீர்நிலைகள்
    X

    தொடர் மழை காரணமாக வண்டியூர் கண்மாய் நிரம்பி வழியும் காட்சி.

    மதுரையில் தொடர் மழையால் நிரம்பி வரும் நீர்நிலைகள்

    • மதுரையில் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று காலை மாணவ, மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில்மழை நீர்குளம் போல் தேங்கியுள்ளது.

    இன்று காலை மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    இந்த மழை காரணமாக முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றிலும் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையொட்டி வைகை அணையில்இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டு வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மதுரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயப்ப ணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை வண்டியூர் கண்மாய், சுமார் 687 ஏக்கர் பரப்பளவு உடையது. இது முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

    எனவே வண்டியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு வந்து வேடிக்கை பார்த்து சொல்கின்றனர். ஒரு சிலர் தூண்டில் வலை போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    வண்டியூர் கண்மாய் நிரம்பியதால் கே.கே. நகர், அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

    அதே நேரத்தில் கண்மாயை சரியாக தூர்வாரி பராமரிக்காமல், விட்டுவிட்டதால் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×