search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார். அருகில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர். 

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×