என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்?
- மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
- இந்திய விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை
தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களின் உள்நாட்டு சேவை மூலம் வான்வழி போக்குவரத்திற்கு பேருதவியாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் பெறாவிட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லலாம்.
மதுரை விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றநிலையில் மதுரை விமான நிலையம் தற்போது வரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெறவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் 5 விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையம் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படவில்லை.
இது தொடர்பாக பாஸ்கரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இந்திய விமான நிலையம் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 2 நீர்நிலை நிலப்பரப்பு தமிழக அரசாங்கத்திடம் நிலுவை யில் உள்ளது. நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.
மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது. இதற்காக விமான சேவை நிறுவனங்க ளுடன் அறிக்கை பெறப் பட்டுள்ளது. மதுரை விமான நிலை யத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான 11லட்சத்து 38ஆயிரத்து 928 பயணிகள் பயணித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.