என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்.
பெண்கள் சாலைமறியல்
- குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட அனுப்பப்பட்டி காந்திநகர். பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு வைகை குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி மூலம் தேக்கி வைக்கப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 22 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் உடைந்து இருந்ததால் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் தடைபட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த காந்தி நகர் மக்கள் காலி குடங்களுடன் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்ட த்தினால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.






