search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின
    X

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று கோவில் திருமண மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக யாகசாலை மண்டபம் அழகுற அமைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின

    • கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
    • பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளதை யொட்டி யாகசாலை பூஜைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்ட பத்தில் இன்று காலை முதல் நடைபெற்றது.

    அழகர்கோவில் கள்ள ழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜையில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. எஜமானர் அழைப்பு, வாஸ்து சாந்தி, புன்யாக வாசனம், கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி பூர்ணாகுதி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ராஜகோபுரம் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பாலாலய பூஜையுடன் ராஜகோபுரம் வண்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் 6.25 அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் உடையது. தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் காட்சி யளிக்கிறது.

    Next Story
    ×