search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கதலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனுகொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாது:-

    கடந்த 2017-ம் ஆண்டு தொற்றா நோய் மருத்துவ பிரிவில் நாங்கள் நியமனம் செய்யப்பட்டோம். பின்னர் மக்களை தேடி மருத்துவத்திற்கு மாற்றப்பட்டோம். எங்களுக்கு கூடுதலாக பணி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஊதிய உயர்வோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. தினமும் 20 வீடுகளில் எங்களை ஆய்வு செய்ய கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 வழங்கப்படும் எனவும், பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×