search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலைமலர் செய்தி எதிரொலி  - செங்கோட்டையில் போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு
    X

    ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காட்சி.

    மாலைமலர் செய்தி எதிரொலி - செங்கோட்டையில் போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலை மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இணைப்பு சாலை

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும்.

    ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விஷ சந்துக்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    போர்க்கால அடிப்படையில்....

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக மாலைமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×