என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மாமல்லபுரம் நகராட்சியாக மாறியது மாமல்லபுரம் நகராட்சியாக மாறியது](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9036202-gov.webp)
X
மாமல்லபுரம் நகராட்சியாக மாறியது
By
மாலை மலர்7 Feb 2025 12:12 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
- பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளை மாமல்லபுரத்துடன் இணைக்கும் பணிகள் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உடைய "யுனஸ்கோ" அங்கீகாரம் பெற்ற சர்வதேச சுற்றுலா நகர பகுதி என்பதால், அதன் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
Next Story
×
X