என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு சேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/31/1754520-1.jpg)
சேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதிக்கையில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்படி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் ஒருவர் சிக்சினார். அவர் வாழப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி (வயது 21) ஆவார்.
இதனை தொடர்ந்து போலீசார், போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்து,ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான வாழப்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.