என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது
- சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான்.
- அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் வ.உ.சி. பழ மார்க்கெட், மண்டிகளுக்கு மாம்பழம் வரத்து அதிக அளவில் இருக்கும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாம்பழ சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரையில் இருந்தது. ஆனால் மாம்பழ சீசன் தற்போது ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
டவுனில் உள்ள பல்வேறு பல மண்டிகளுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா, நடு சாளை, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது.
சேலத்தை சுற்றியுள்ள குப்பனூர், வேப்பிலைப்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி உள்பட பல இடங்களில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து தினமும் 10 டன் அளவிற்கு பல்வகை மாம்பழங்கள் வருகிறது. இதனை மண்டியிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். மல்கோவா, சேலம் பெங்களூரா, இமாம் பசந்த் மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், குண்டு வகை மாம்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், நடு சாலை கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து இன்னும் சேலத்திற்கு மாம்பழம் வரத்து தொடங்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் அங்கிருந்தும் மாம்பழங்கள் வரும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். வருகிற 15-ந் தேதிக்குள் மாம்பழம் வரத்து உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கிறோம்.
60 நாட்களுக்கு மேலாக சீசன் களைகட்டும். வெளியூர் வியாபாரிகள் பல்வேறு மாம்பழங்களை புக்கிங் செய்து வருகிறார்கள். ஆனால் வியாபாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்